ஒருதலைக் காதல்...! ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை

ஒருதலை காதலால் சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-13 11:25 GMT

சென்னை,

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா(20) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரெயிலில் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார்.

இதில் ரெயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சதீஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனைதொடர்ந்து தப்பி ஓடிய சதீஷை பிடிக்க போலீசார் 7 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

கொல்லப்பட்ட மாணவி சத்யா ஆதம்பாக்கம் போலீஸ் நிலைய தலைமை காவலர் ராமலட்சுமியின் மகளாவார்

கொலையாளி சதீஷ், ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்