தூத்துக்குடி கே.டி.சி நகரை சேர்ந்தவர் சீனிராஜா (வயது 44). இவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். எட்டயபுரம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயம் அடைந்த சீனிராஜா சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.