50 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

பண்ருட்டியில் 50 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-09 19:15 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) நந்தகுமார் தலைமையிலான போலீசார் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் மறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையத்தை சேர்ந்த ஷேக் என்கிற ஜெய்கணேஷ்(வயது 22) என்பதும், இவர் பண்ருட்டி லிங்கா ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன்(50), என்பவரது வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஜெய்கணேசை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்