வீடு புகுந்து பெண்ணை தாக்கியவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை

வீடு புகுந்து பெண்ணை தாக்கியவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-02-13 17:25 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 61). அவரது மனைவி மதி. கடந்த 25.8.18-ந்தேதி முருகன் சென்னை சென்றிருந்தார். வீட்டில் கழிவுநீர் தொட்டி அமைக்கும் கட்டுமான பணியை மதி பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மதிவாணன், தொட்டி கட்ட கூடாது எனக் கூறி மதியை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் ஆத்திரத்தில் அடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து முருகன் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். படுகாயம் அடைந்த மதி வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

இந்த வழக்கு வாலாஜா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நீதிபதி மகாசக்தி வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட மதிவாணனுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்