நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல் ஒருவர் பலி

திருக்கோவிலூர் அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல் ஒருவர் பலி

Update: 2022-09-04 17:46 GMT

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர் அருகே பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார்(வயது 50). இவர் சம்பவத்தன்று மாசிலாமணி என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்டகார வைத்துக்கொண்டு ஓட்டிச் சென்றார். அரும்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அய்யனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாசிலமாணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து அய்யனார் மகன் வடிவழகன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்