குளிர்சாதனபெட்டி தீப்பிடித்து ஒருவர் காயம்

குளிர்சாதனபெட்டி தீப்பிடித்து ஒருவர் காயம் அடைந்தார்

Update: 2022-11-27 22:25 GMT

முக்கூடல்:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பள்ளக்கால் பொதுக்குடி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பேச்சிமுத்து (வயது 50). இவருடைய மகன் துரைமுருகன். இவர்களுடைய வீட்டில் புதியதாக குளிர்சாதன பெட்டி (ஏ.சி.) வாங்கி அதை மெக்கானிக் ஒருவர் பொருத்தி கொண்டிருந்தார். பேச்சிமுத்து அருகி்ல் நின்று கொண்டிருந்தார். அப்போது ஏ.சி. எந்திரத்தில் திடீரென தீப்பிடித்தது. இதில் பேச்சிமுத்து காயம் அடைந்தார். இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்