செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் தை பூஜை திருவிழா

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் தை பூஜை திருவிழா தொடங்கியது.பக்தர்கள் குடும்பத்தினருடன் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Update: 2023-01-20 18:45 GMT

உடன்குடி:

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் தை பூஜை திருவிழா தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தைப்பூஜை திருவிழா

உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் பெரியசாமி, பெரிய பிராட்டிஅம்மன், வயண பெருமாள், அனந்தம்மாள், ஆத்தி சுவாமி, திருப்புலி ஆழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய ஏழு தெய்வங்கள் ஒரே கோட்டைக்குள் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் தை பூஜைதிருவிழா 4 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் பகல்11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேக்கட்டி பூஜை நடந்தது. நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை சிறப்பு வழிபாடு நடந்து. இரவு 7 மணிக்கு சக்தி வழிபாடு என்ற தலைப்பில் மோகனசுந்தரம் சமய சொற்பொழிவும், இரவு 9 மணிக்கு திரைப்பட இன்னிசை கச்சேரியும் நடந்தது.

பக்தர்கள் குவிந்தனர்

விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் கார், வேன், பஸ்கள் போன்ற வாகனங்களில் வந்து கோவிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று( சனிக்கிழமை) காலை முதல் இரவு 10 மணி வரை முழு நேரமும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மேலும் தை அமாவாசை என்பதால் பணிவிடை அனுமதி உண்டு. நாளைமறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் தை பூஜை திருவிழா நிறைவு பெறுகிறது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், கோவில் தக்கர் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் ஜெயந்தி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்