திண்டிவனத்தில் லாரி மோதி வாலிபர் சாவு குழந்தைகளை பள்ளியில் விட்டு திரும்பிய போது விபத்து

திண்டிவனத்தில் லாரி மோதி வாலிபர் உயிரிழந்தாா்.

Update: 2022-11-17 18:45 GMT


திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த சாரம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 35). இவரது மனைவி இளையநிலா. இவர்களுக்கு மெர்சி(11), சாம்மோசஸ்(3) என்று 2 குழந்தைகள் உள்ளது. நேற்று காலை ஸ்டீபன் ராஜ் தனது 2 குழந்தைகளையும் அஜிஸ் நகரில் உள்ள பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, சாரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வந்த போது, எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அ டைந்த ஸ்டீபன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து நேர்ந்தது எப்படி, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்