குட்டையில் மூழ்கி ஒருவர் சாவு

தாமரைப்பூ பறிக்க சென்றபோது குட்டையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2023-09-18 19:30 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவை அடுத்த சொக்கனூரை சேர்ந்தவர் காளிமுத்து(வயது 43). இவர் நேற்று தாமரைப்பூ பறிப்பதற்காக தனது வீட்டின் அருகே உள்ள குட்டைக்கு சென்றார். அப்ேபாது கால் தவறி குட்டைக்குள் விழுந்தார். ஆனால் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்