ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
பண்பொழி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு காலையில் கோவில் வளாகத்தில் பணிநிறைவு பெற்ற ஆசிரியா் ஆறுமுகம் தலைமையில் கேரள பாரம்பரிய உடையணிந்து வந்த பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு வாசனை திரவியங்கள், மஞ்சள், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பண்பொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.