கம்பத்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கம்பத்தில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-28 18:45 GMT

கம்பம் கெஞ்சையன் குளம் பகுதியில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை நடத்த முயன்றனர். இதற்கிடையே மோட்டார்சைக்கிளை நிறுத்தியதும் 2 பேரும் தப்பி ஓடினர். அதில் ஒருவரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.

பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், கம்பம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 22) என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டாா்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய, கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்