கம்பத்தில் கனமழையால் வயலில் சாய்ந்த நெற்பயிர்கள் : அறுவடை பணிகள் பாதிப்பு

கம்பத்தில், கனமழையால் வயலில் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.

Update: 2022-10-16 16:34 GMT

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்பில் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு அணையின் பாசனம் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முதல்போக நெல் சாகுபடி செய்தனர். தற்போது நெற்பயிர்கள் விளைச்சல் அடைந்து எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வயலில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்தன. வயல்களில் சேறும், சகதியுமாக உள்ளதால் எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்