கம்பத்தில் போலீசாருக்கு தேசிய கொடி வினியோகம்
கம்பத்தில் போலீசாருக்கு தேசிய கொடி வினியோகம் செய்யப்பட்டது
75 வது சுதந்திர தினத்தையொட்டி வீடு மற்றும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றும் வகையில் தேசிய கொடி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீசார் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார். அதன்பேரில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு தேசிய கொடியினை வழங்கினார்.