குலசேகரத்தில் ரப்பர் ஷீட் திருட்டில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
குலசேகரத்தில் ரப்பர் ஷீட் திருட்டு வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நாகர்கோவில்:
குலசேகரத்தில் ரப்பர் ஷீட் திருட்டு வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ரப்பர் ஷீட் திருட்டு
திற்பரப்பு பகுதியில் உள்ள நக்ராண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 35). இவர் மீது ரப்பர் ஷீட்டுகள் திருடியதாக குலசேகரம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஜெகன் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரை போலீசார் தேடி வந்தனர்.
ஆனால் போலீஸ் தேடுவதை அறிந்த ஜெகன் தலைமறைவாகி விட்டார். இதைத் தொடர்ந்து அவரை பிடிக்க குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் திருடன் எச்சரிக்கை என்ற தலைப்பில் ஜெகனின் படத்துடன் சுவரொட்டி ஒட்டி போலீசார் தேடி வந்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்த நிலையில் ஜெகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜெகன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஜெகனை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் ஸ்ரீதருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார்.
இதற்கு கலெக்டர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து ஜெகனை குலசேகரம் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.