உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டுகல்லூரி மாணவிகள் நூலக பயணம்
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஏபிசி மகாலட்சு மி கல்லூரி மாணவிகள் நூலக பயணம் மேற்கொண்டனர்.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம் மற்றும் தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி சார்பில் மாணவிகளுக்கான நூலக பயணம் நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் மா.ராம்சங்கர் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். கல்லூரி பேராசிரியைகள் ஜெ.வசந்த சேனா, ஜெ.கிருஷ்ணபிரியா ஆகியோர் பேசினர். மாணவிகள் சினேகா ரத்தினம், சவுந்தர்யா சண்முகசக்தி ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி அரிமா சங்க வட்டார தலைவர் சுரேஷ் தங்கராயப்பன் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், நூலக பணியாளர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மைய நூலக இரண்டாம் நிலை நூலகர் கொ.சங்கரன் நன்றி கூறினார்.