வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகை, கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகை, கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அடுத்த மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வேயின் சார்பில், அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12636/12635) மற்றும் தென்காசி, மதுரை வழியாக இயக்கப்படும் கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16101/16102) ஆகிய ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில்களில் மேற்கண்ட நாட்களுக்கு ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்துக்கு முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.