தேய்பிறை அஷ்டமியையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று, பெரியகுளம் தென்கரையில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலபைரவருக்கு பால், பழம், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதேபோல், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் உள்ள மலை மேல் கைலாசநாதர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.