புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி ஈரோட்டில் காய்கறி விலை உயர்ந்தது

புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி ஈரோட்டில் காய்கறி விலை உயர்ந்தது.

Update: 2023-09-19 22:18 GMT

புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி ஈரோட்டில் காய்கறி விலை உயர்ந்தது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.110-க்கு விற்பனையானது.

விலை உயர்வு

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அங்கு இரவு நேரத்தில் மொத்த விற்பனையும், பகலில் சில்லரை விற்பனையும் நடக்கிறது. புரட்டாசி மாதத்தில் விரதம் கடைப்பிடிப்பவர்கள் அசைவ உணவை தவிர்ப்பதுண்டு. இதனால் காய்கறி பயன்பாடு அதிகரித்து உள்ளதாலும், கடந்த வாரத்தில் வந்த சுபமுகூர்த்த தினம் காரணமாகவும் ஈரோட்டில் காய்கறியின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது.

குறிப்பாக கடந்த வாரம் ரூ.80-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கருப்பு அவரை நேற்று ரூ.130-க்கு விற்பனையானது. ரூ.60-க்கு விற்ற ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90 முதல் ரூ.110 வரையும், ரூ.25-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ புடலங்காய் ரூ.40-க்கும், ரூ.25-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.50-க்கும் என விலை உயர்ந்தது. ரூ.30-க்கு விற்கப்பட்ட முள்ளங்கி ரூ.50-க்கும், ரூ.10-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.20-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட பீட்ரூட் ரூ.70-க்கும் விலைபோனது.

தக்காளி

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறி விலை விவரம் வருமாறு:-

பீர்க்கங்காய் - ரூ.40, பாகற்காய் - ரூ.40, முருங்கைக்காய் - ரூ.40, கொத்தவரங்காய் - ரூ.30, கேரட் - ரூ.60, பச்சை மிளகாய் - ரூ.50, பட்டஅவரை - ரூ.70, பழைய இஞ்சி - ரூ.300, சின்ன வெங்காயம் - ரூ.50, பெரிய வெங்காயம் - ரூ.40, முட்டைகோஸ் - ரூ.20, காலிபிளவர் - ரூ.40, உருளைக்கிழங்கு - ரூ.40, தக்காளி - ரூ.15

Tags:    

மேலும் செய்திகள்