பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருண்டை வெல்லம் உற்பத்தி பணிகள் தீவிரம்

உற்பத்தி பணிகள்

Update: 2022-12-14 20:20 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருண்டை வெல்லம் உற்பத்தி பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு முக்கிய தேவைகளில் ஒன்றாக இருப்பது வெல்லம். பொங்கலுக்கு தித்திக்கும் இனிப்பை தருவது உருண்டை வெல்லம். கரும்பை ஆலையில் அரைத்து, அதன் சாறினை பெரிய கொப்பரைகளில் காயவைத்து, பாகு பருவத்தில், அழகாக உருட்டி உருண்டை வெல்லம் தயார் செய்கிறார்கள். ஒரு வெல்லம் 750 கிராம் எடை முதல் 900 கிராம் எடை வரை உள்ளது. வெல்லம் செய்யும் முறையை பார்த்தாலே நாக்கு தித்திக்கிறது. அந்த அளவுக்கு நேர்த்தியாக வெல்லம் உற்பத்தியில் பணியாளர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று விலை உயர்ந்து இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஈரோடு அருகே முள்ளாம்பரப்பில் பொங்கல் உருண்டை வெல்லம் உற்பத்தியில் வெளியூர்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். சமீப காலமாக அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருவதால் இந்த ஆண்டு உருண்டை வெல்லம் சற்று விலை உயர்ந்து உள்ளதாகவும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் உற்பத்தியாளர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்