மகாவீர் ஜெயந்தியையொட்டிமதுக்கடைகள் நாளை மறுநாள் மூடல்:கலெக்டர் தகவல்

மகாவீர் ஜெயந்தியையொட்டி, தேனி மாவட்டத்தில் நாளை மறுநாள் மதுக்கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-04-01 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மகாவீர் ஜெயந்தியையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், தனியார் மதுபான பார்கள் அனைத்தும் நாளை மறுநாள் மூடப்பட்டு இருக்க வேண்டும். மதுவிற்பனை எதுவும் அன்றைய நாளில் நடக்கக்கூடாது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் மதுபான கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்