உள்ளாட்சிதினத்தை முன்னிட்டு 403 பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம்

உள்ளாட்சிதினத்தை முன்னிட்டு 403 பஞ்சாயத்துகளில் செவ்வாய்க்கிழமை கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2022-10-31 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்டத்தில் உள்ள 403 பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடக்கிறது. இந்த கிராமசபை கூட்டத்தின் போது, அனைத்துத்துறை தொடர்பான கண்காட்சிகள், கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்த நம்ம ஊரு சூப்பரு இயக்கம் வரை தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், கிராம பஞ்சாயத்தில் சிறப்;பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கவுரவித்து அங்கீகரித்தல், பொதுமக்கள் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அதே போன்ற அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராமசபைக் கூட்ட நிகழ்வுகளைக் கண்காணிக்க நம்ம கிராம சபை என்ற கணினி, தொலைபேசி, மென்பொருள் உருவாக்கப்பட்டு அதில் நிகழ்வுகளை பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கிராமசபைக் கூட்டங்களில் அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர். ஆகையால் இந்த கூட்டங்களில் ஊரகப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்