கிருஷ்ண ஜெயந்தியையொட்டி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தார்.

Update: 2023-09-06 18:30 GMT

அரியலூர் பட்டு நூல்கார தெருவில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து பெருமாளை வழிபட்டு சென்றனர். மாலை வரதராஜ பெருமாள் கிருஷ்ணர் வேடத்தில் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து திருவீதி உலா புறப்பட்டார். அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் கிருஷ்ணர் சின்னக்கடை தெரு, வெள்ளாளத்தெரு, சத்திரம், முருகன் கோவில், பெரிய கடைத்தெரு, கோமுட்டி தெரு, பூக்கார தெரு, மேளக்கார தெரு வழியாக கோவிலை அடைந்தது. வீதி எங்கும் பக்தர்கள் வீடுகளின் முன்பு வண்ண கோலமிட்டு கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணை, கொழுக்கட்டை, சுண்டல், சீடை உள்ளிட்ட பலகாரங்களை வைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்