ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு- திரளான பக்தா்கள் தரிசனம்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு கிணத்துக்கடவு பகுதியில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-07-23 14:21 GMT

கிணத்துக்கடவு

ஆடி கிருத்திகையை முன்னிட்டு கிணத்துக்கடவு பகுதியில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி கிருத்திகை

கிணத்துக்கடவில் கோவை -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் மலைமீது உள்ள பொன்மலையில் பிரசித்தி பெற்ற வேலாயுதசாமி கோவிலில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது.

இதையடுத்து பொன்மலை வேலாயுதசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து வேலாயுதசாமி ராஜ அலங்காரத்தில் மலர் மாலைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்து சென்றனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பால தண்டாயுதபாணி

இதேபோல் கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமிக்கு சஷ்டி குழுவினர் சார்பில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் முத்துக்கவுண்டனூர் பகுதியில் மலைமீது அமைந்துள்ள முத்துமலை முருகன் கோவிலிலும் ஆடி கிருத்திகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்