அனுமந்த் ஜெயந்தியையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
அனுமந்த் ஜெயந்தியையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அனுமந்த் ஜெயந்தியையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. போடி சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். மேலும் வடை மற்றும் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் பாம்பாற்று ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் கிருஷ்ணன் கோவிலிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றன. சின்னமனூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.