களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளித்து சென்றனர்.

Update: 2022-08-14 19:18 GMT

களக்காடு:

களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் நேற்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தலையணை

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரல் மழை பெய்தது. இதனால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனைதொடர்ந்து கடந்த 4-ந் தேதி முதல் தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

அதன் பின்னர் மழையின் தாக்கம் குறைந்ததால் தலையணையிலும் வெள்ளம் தணிந்தது. இதையடுத்து தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

இந்த நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக களக்காடு தலையணயைில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தலையணையில் குவிந்தனர். அங்குள்ள தடுப்பணையில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

நேற்று உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தலையணையில் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்