ஏரல்:
ஏரல் அருகே உள்ள பண்ணைவிளை திருமண மண்டபத்தில் உபவாச ஜெபக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தாமஸ் தேவதாசன் ஆரம்ப ஜெபம் செய்தார். தேவ செய்தியை ஜார்ஜ் ஏசுதாசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சேகர தலைவர்கள் பண்ணைவிளை ஜான் வெஸ்லி, மன்னாரையன்தட்டு ஜான் சாமுவேல், பண்டாரவிளை சுந்தர்சிங் ஐசக்ராஜா, சுப்பிரமணியபுரம் டேவிட் ராஜா, சாயர்புரம் இஸ்ரவேல் ராஜ துரைசிங், ஏரல் கிங்ஸ்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.