திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில்ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில் ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-09-26 18:45 GMT

திருச்செந்தூர்:

நாடு முழுவதும் கடந்த 15-ந் தேதி முதல் வருகிற காந்தி ஜெயந்தி (அக். 2-ந் தேதி) வரை "சுவச்சத்தா ஹி சேவா" நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, திருச்செந்துர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அணி எண்.48, துளசி பாராமெடிக்கல் கல்லூரி திருச்செந்தூர் நகராட்சி ஆகியவை இணைந்து திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டன. மேலும் அங்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கவிதா தலைமையில் 65 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் மாணவர்கள், நகராட்சி பணியாளர்கள், ரெயில்வே போலீசார் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் கண்மணி, சுகாதார ஆய்வாளர் செல்லப்பாண்டியன், ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, ஏட்டு இஸ்ரேல் ஆகியோர் உதவியுடன் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செய்திருந்தார்.

இதேபோன்று, திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆரோக்கிய மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்.43 ஆகியவை இணைந்து மன அழுத்த மேலாண்மை குறித்த உளவியல் பார்வை என்ற தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆரோக்கிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்று பேசினார். இதில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி, காயாமொழி புற மருந்தக கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளர் ரூபன் கிங்ஸ்லி, ஆராய்ச்சி மாணவர் டாக்டர் பிந்துஜா தரண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியைகள் கவிதா, தீபாராணி, நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.43-ன் திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆஸாத் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்