இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில்பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் 5 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் அதிகாரி தகவல்

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் 5 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது

Update: 2023-05-29 19:47 GMT

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மணமக்கள் 5 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது. எனவே கோவில் அலுவலகத்தை தகுதி உள்ள மணமக்கள் தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு தேர்வு செய்யப்படும் ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தங்க தாலி, கட்டில், மெத்தை, வேட்டி, சேலை, மிக்சி, 2 கைக்கடிகாரம், வீட்டு உபயோக பொருட்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படும். வருகிற ஜூன் மாதம் இறுதி வாரத்தில் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது. திருமணத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த தகவலை பவானி சங்கமேஸ்வரர் கோவில் இணை ஆணையாளர் சுவாமிநாதன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்