கீழ ஈரால் தொன்போஸ்கோ கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
கீழ ஈரால் தொன்போஸ்கோ கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
எட்டயபுரம்:
கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் விளாத்திகுளம் வேம்பு மக்கள் சக்தி இயக்ககம் இணைந்து கோவில்பட்டி அருகே உள்ள நாரணாபுரம் கிராமத்தில் ஒரு நாள் சிறப்பு முகாம் நடத்தினர். கல்லூரி செயலர் விக்டர் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் ஜோசப் சார்லஸ் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட முகாமை அருட் தந்தை பரத் தொடங்கி வைத்தார்.
முகாமில் மாணவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களும் சேர்ந்து தூய்மை பணியை மேற்கொண்டனர். முகாமில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் பிரபு செய்திருந்தார்.