திராவிட மாணவர் கழகம் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
தேனி பங்களாமேட்டில் திராவிட மாணவர் கழகம் சார்பில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி பங்களாமேட்டில் திராவிட மாணவர் கழகம் சார்பில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல மாணவரணி செயலாளர் பெரியார்மணி தலைமை தாங்கினார். தி.க. மாவட்ட தலைவர் ரகுநாகநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் நாராயணபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் தர்மர், ஜெய்பீம் புரட்சிப்புலிகள் நிறுவன தலைவர் அருந்தமிழரசு மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.