கோவில்பட்டி, புதியம்புத்தூரில் பா.ஜ.க.சார்பில்நீர்மோர் பந்தல் திறப்பு
கோவில்பட்டி, புதியம்புத்தூரில் பா.ஜ.க.சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி, புதியம்புத்தூரில் பா.ஜ.க.சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
நீர்மோர் பந்தல்
கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனை முன்பு பா.ஜ.க. இதர பிற்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஏற்பாட்டில் நீர்மோப் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இதர பிற்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பிற்பட்டோர் பிரிவு மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் மாரியப்பன், அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், வர்த்தபிரிவு மாவட்ட தலைவர் ராஜூ, நகர தலைவர் சீனிவாசன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதியம்புத்தூர்
இதேபோனறு, ஓட்டப்பிடராம் அருகே உள்ள புதியம்புத்தூரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சென்னகேசவன் தலைமை தாங்கி பந்தலை திறந்து வைத்தார். இதில் ஒன்றிய தலைவர் சரவணன், ஒன்றிய பொதுச் செயலாளர் முத்தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கனகராஜ், திருமணி செல்வம், ஒன்றிய துணைத் தலைவர் ஜெயசெல்வி, ஒன்றிய பொருளாளர் கதிரவன், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் சிவபாரத்கமல், மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர்குமார், மாவட்ட செயலாளர் செந்தில்பிரபு, மாவட்ட செயலாளர் ஹேமமாலினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.