அண்ணா தொழிற்சங்கம் சார்பில்மே தின விழா பொதுக்கூட்டம்

கோவில்பட்டியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-05-02 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மே தினவிழா பொதுக்கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

மே தின விழா பொதுக்கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் மே தின விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் என். ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகர செயலாளர் எஸ். விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஆர். சத்யா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பா. ராமர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

கயத்தாறு

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆசூர் கிராமத்தில் ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை மற்றும் வாறுகால் அமைக்கவும், கயத்தாறு பேரூராட்சி அரசன்குளம் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், சிதம்பராபுரம் கிராமத்தில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அமைக்கவும் பூமிபூஜை நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சிகளில் அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, கடம்பூர் நகரச் செயலாளர் வாசமுத்து, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆசூர்காளிபாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகண்ணன், ஆசூர் பஞ்சாயத்து தலைவர் சண்முகம், துணைத்தலைவர் மாரிமுத்து, சிதம்பராபுரம் பஞ்சாயத்து தலைவர் கீதாலட்சுமி, பஞ்சாயத்து துணைத்தலைவர் சுப்பாராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்