விதிமுறைகளை மீறிய 12 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

விதிமுறைகளை மீறிய 12 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2022-10-06 14:47 IST

காஞ்சீபுரத்தை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட்டில் போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி பதிவு கொண்ட ஆம்னி பஸ் டோல்கேட்டை கடக்க முயன்ற போது போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்தார். அப்பொழுது முறையான ஆவணங்கள் இன்றி புதுச்சேரி பஸ் தமிழகத்திற்கு இதுவரை ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்து இயக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்து காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு முன்பு நிறுத்தி வைத்தனர்.

இந்த சோதனையில் 12 ஆம்னி பஸ்களுக்கு முறையான ஆவணங்கள், விதிமுறை மீறல் தொடர்பாக ரூ.27,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்