க.பரமத்தி அருகே உள்ள பவித்திரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பூங்கோதை (வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு கரூர் -கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது பவித்திரத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற தண்ணீர் டேங்கர் லாரி பூங்கோதை மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பூங்கோதையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் க.பரமத்தி அன்னை நகரை சேர்ந்த சரவணன் (44) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.