தீ விபத்தில் காயம் அடைந்த மூதாட்டி சாவு

நெல்லை டவுனில் தீ விபத்தில் காயம் அடைந்த மூதாட்டி இறந்தார்.

Update: 2023-07-12 18:46 GMT

நெல்லை டவுன் தண்டியல்சாவடி தெருவை சேர்ந்தவர் சேதுராமலிங்கம் மனைவி முத்துலட்சுமி (வயது 74). இவர் கடந்த 7-ந்தேதி வீட்டில் சமையல் செய்த போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்