தூக்கணாம்பாக்கம் அருகே மலட்டாற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு

தூக்கணாம்பாக்கம் அருகே மலட்டாற்றில் தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-09-09 17:17 GMT

நெல்லிக்குப்பம், 

தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள நல்லாத்தூர் மணெவளி பகுதியை சேர்ந்தவர் ஜோதி (வயது 60). சம்பவத்தன்று இவர் தனது பசுமாட்டை குளிப்பாட்டுவதற்காக அங்குள்ள மலட்டாற்றுக்கு ஓட்டிச்சென்றார். பின்னர் அவர் மாட்டை குளிப்பாட்டும் போது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி ஆற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மூதாட்டியை ஆற்றுக்குள் இறங்கி தேடியதோடு, இதுபற்றி நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கும், தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார்ரும், கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து பலமணி நேரம் போராடி மூதாட்டியை பிணமாக மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்