குளத்தில் மூழ்கி மூதாட்டி பலி

இரணியல் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலி

Update: 2022-12-15 19:55 GMT

திங்கள்சந்தை, 

இரணியல் அருகே உள்ள செக்காலதெருவை சேர்ந்தவர் மாதவன்பிள்ளை. இவரது மனைவி கோலம்மை (வயது77). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறுவதும், அவரை உறவினர்கள் மீட்டு வருவதுமாக இருந்துள்ளனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கோலம்மையை திடீரென காணவில்லை. உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது அருகில் உள்ள கோவில் குளத்தில் கோலம்மை பிணமாக மீட்கப்பட்டார். அவர் குளத்தின் அருகே சென்ற போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருத்தப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் செந்தில் (45) இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்