ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் மூதாட்டி பலி
ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் மூதாட்டி இறந்தார்.
நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஸ்வரி (வயது 65). இவரது மகள் செந்தில்வடிவு (44). இவா்கள் இருவரும் நேற்று முன்தினம் திருச்சி-சென்னை பைபாஸ் ஒய்.ரோடு ஜங்ஷன் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னை பெரும்பாக்கம் செந்தில்நகரை சேர்ந்த சுரேந்தர் பாண்டியன் (33) என்பவர் ஓட்டிவந்த கார் செந்தில்வடிவு ஓட்டி வந்த ஸ்கூட்டரின் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரின் பின்னால் உட்கார்ந்து இருந்த ரமேஸ்வரியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், செந்தில்வடிவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் ரமேஸ்வரி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்கூட்டரின் மீது மோதிய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.