ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
கம்பத்தில், ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம் சுருளிப்பட்டி சாலையில் உள்ள தொட்டமன்துறை தடுப்பணை முல்லைப்பெரியாற்றில் மூதாட்டி பிணம் மிதந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி மூதாட்டி உடலை மீட்டனர்.
இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் கூடலூர் அருணாச்சல கவுண்டர் தெருவை சேர்ந்த சுருளியம்மாள் (வயது 75) என்பது தெரிந்தது. மேலும் கால் வலியால் அவதியடைந்த அவர் மன உளைச்சலில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.