தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி இந்திரா தேவி (வயது 68). இவர் கடந்த சில வருடங்களாக கடுமையான தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த இந்திரா தேவி திடீரென உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி கொண்டு தீ வைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.