ஓடும் பஸ்சில் மாணவியிடம் தவறாக நடந்த முதியவர் போலீசில் ஒப்படைப்பு

ஓடும் பஸ்சில் மாணவியிடம் தவறாக நடந்த முதியவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

Update: 2022-11-10 22:20 GMT

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறி பயணித்துள்ளார். அப்போது பஸ்சில் இருந்த பள்ளி மாணவி ஒருவரிடம், அந்த முதியவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த மாணவி சத்தம் போட்டதை தொடர்ந்து, பஸ்சில் இருந்தவர்கள் அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், முதியவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து கூறியுள்ளார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள், முதியவரை பிடித்து தர்ம அடி கொடுத்து, பாய்லர் ஆலை போலீசில் ஒப்படைத்தனர். அந்த முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்