ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
பட்டுக்கோட்டை அருகே ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
பட்டுக்கோட்டை;
திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி செல்லும் விரைவு ரெயில் நேற்று காலை 9.35 மணி அளவில் முடுக்குக்காடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென்று ரெயில் முன் பாய்ந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.உயிரிழந்த முதியவர் சந்தனக் கலர் மேல் சட்டையும், பச்சைக் கரை போட்ட வேட்டியும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முதியவர் உடலை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.