வாகனம் மோதி மூதாட்டி பலி

சாத்தான்குளம் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2023-09-09 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் பன்னம்பாறை சிவானந்தபுரம் சாய்பாபா கோவில் அருகில் நேற்று முன்தினம் இரவு வாகனம் மோதி 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக பன்னம்பாறை கிராம நிர்வாக அலுவலர் மதுமதி, சாத்தான்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார் அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்