அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 85). இவர் பெரம்பலூர் மாவட்டம் சடைக்கன்பட்டி கிராமத்தில் உள்ள தனது மகள் சாந்தி வீட்டிற்கு, தனது மருமகனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு கோவிந்தசாமி இயற்கை உபாதை கழிப்பதற்காக சடைக்கன்பட்டி கிராமத்தில் செல்லும் அரியலூர்- பெரம்பலூர் ரோட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு ரோட்டு ஓரமாக நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த கார், நடந்து சென்ற கோவிந்தசாமியின் மீது மோதியது. இதில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் விரைந்து சென்று கோவிந்தசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.