லால்குடி, செப்.8-
லால்குடி அருகே நஞ்சை சங்கேந்தி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரெத்தினம் (வயது 65). விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது ரெத்தினம் வெள்ளனூர் கூத்தூர் - சிதம்பரம் புதிய 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, கல்லக்குடி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரெத்தினம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.