விபத்தில் முதியவர் காயம்

விபத்தில் முதியவர் காயம் அடைந்தார்.

Update: 2023-04-15 19:15 GMT

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவில் உள்ள மம்சாபுரம் இடையன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 72). இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளில் இடையன்குளம்-மம்சாபுரம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், காளியப்பன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்