பள்ளிகொண்டான் தடுப்பணையில் மூழ்கி முதியவர் சாவு

பள்ளிகொண்டான் தடுப்பணையில் மூழ்கி முதியவர் சாவு

Update: 2023-06-25 18:45 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 74), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அய்யப்பன் கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து, ஞாலத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் காலையில் வேலைக்கு சென்ற அய்யப்பன் இரவு வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை பல இடங்களில் ேதடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலையில் பள்ளிகொண்டான் தடுப்பணையின் ஷட்டர் பகுதியில் அய்யப்பன் பிணமாக மிதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, இறந்து கிடந்தது அய்யப்பன் தான் என்பது உறுதி செய்தனர். பின்னர், இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அய்யப்பன் தடுப்பணை பகுதியில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து அய்யப்பனின் மகன் ரமேஷ் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்