அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே உள்ள இடைக்கோடு மடத்துவிளையை சேர்ந்தவர் கேசரி (வயது64). இவர் குழித்துறையில் இருந்து பனச்சமூடு செல்லும் அரசு பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார். அந்த பஸ் கூட்டமாவிளையில் வளைவான பகுதியில் வந்த போது கேசரி இறங்குவதற்காக பின்பக்க படிக்கட்டில் நின்றுள்ளார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை பஸ்சில் இருந்தவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கேசரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் ஷிபுமோன் பளுகல் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.