ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

சங்கரன்கோவிலில் ரெயிலில் அடிபட்டு முதியவர் இறந்தார்.

Update: 2022-12-27 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்குபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் ஆனைக்குட்டி (வயது 69). இவருக்கு பார்வதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தெருக்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் கண்ணாடி பாட்டில்களை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்தி வந்தார். இவர் நேற்று தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் சங்கரன்கோவில் ெரயில் நிலையம் அருகில் உள்ள தண்டவாள பகுதியில் தனது சைக்கிளை நிறுத்திவிட்டு பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் கண்ணாடி பாட்டில்களை எடுத்து கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை வழியாக ரெயில் சென்றது. அதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ெரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது சம்பந்தமாக ஆனைகுட்டியின் மனைவி பார்வதி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீஸ் சிறப்பு சார்பு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தினார். ஆனைக்குட்டியின் உடலை போலீசார் கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்