லாரி மோதி முதியவர் சாவு

லாரி மோதி முதியவர் சாவு

Update: 2022-07-25 19:42 GMT

அம்மாப்பேட்டை

அம்மாப்பேட்டை அருகே சங்கரதேவன் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது64). சம்பவத்தன்று இவர் கோவிலூர் கடை வீதிக்கு சென்று விட்டு தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையோரமாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக விஜயகுமார் மீது மோதியது. தொடர்ந்து முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த கோவிலூர் மெயின் ரோட்டை சேர்ந்த அல்போன்ஸ் மனைவி ஸ்டெல்லா மேரி (42) என்பவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்டெல்லாமேரி உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அல்போன்ஸ் கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்